12 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி., சூர்யா பட ஹீரோயின் ஷாக் அப்டேட்., ரசிகர்கள் வருத்தம்!!

0

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் ஈஷா தியோல். பிரபல நடிகை  ஹேமா மாலினி மகளான இவர் பாலிவுட் திரையில் முதன் முதலில் அறிமுகமானார்.  இதை தொடர்ந்து தான் இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதாவது சூர்யா ஹீரோவாக நடித்த ஆயுத எழுத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர் மனதில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தார்.

இவ்வாறு தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வந்த இவர் 2012 ஆம் ஆண்டு பாரத் தக்தானி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில் தனது 12 வருட திருமண வாழ்க்கையை தான் முறித்துக் கொண்டதாகவும் ஈஷா தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக TET தேர்வர்களே…, தேர்வில் வெற்றி பெற உங்களுக்கான சிறந்த பயிற்சி மையம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here