சரியான செருப்படி.. வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன் – சார்பட்டா நாயகி துஷாரா நெத்தியடி பதில்!

0
சரியான செருப்படி.. வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன் - சார்பட்டா நாயகி துஷாரா நெத்தியடி பதில்!

பத்திரிகையாளர் சந்திப்பில் துஷாரா விஜயனிடம் பயில்வான் ரங்கநாதன் நேரடியாக சில கேள்விகளை கேட்டு வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

நடிகை துஷாரா விஜயன்:

கடந்த வருடம் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை துஷாரா விஜயன் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இதனை தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்து நேற்று வெளியாகிய திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்பு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் படம் திரையிடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் நேரடியாக சில கேள்விகளை கேட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார். அதாவது, படத்தில் தன் பால் ஈர்ப்பாளர்கள் பற்றிய காட்சிகள் காட்டப்பட்டது, புது கலாச்சார சீரழிவை உண்டாக்குகிறீர்களா? என்றும் அர்ஜுன் கதாபாத்திரம் மற்றும் வில்லன் வைக்கும் கேள்விகளுக்கான பதில்கள் எங்கே? போன்ற கேள்விகளை பயில்வான் எழுப்பினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதற்கு நடிகை துஷாரா விஜயன் இதை தான் கலாசார சீரழிவாக பார்க்கவில்லை என்றும், மக்கள் எங்கள் கருத்துக்களை ஏற்க வேண்டும் என்று நாங்கள் தூண்டவில்லை என்றும், நான் நடித்த இரண்டு படங்களும் ஒன்று தான் என பயில்வான் ரங்கநாதனை வாயை அடைக்கும் அளவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here