என்னது, வாடி போடின்னு பேசுவியா? உனக்கு அவ்வளவு திமிரா? பிக் பாஸ் அசீமை துவைத்தெடுத்த நடிகை!!

0
என்னது, வாடி போடின்னு பேசுவியா? உனக்கு அவ்வளவு திமிரா? பிக் பாஸ் அசீமை துவைத்தெடுத்த நடிகை!!
என்னது, வாடி போடின்னு பேசுவியா? உனக்கு அவ்வளவு திமிரா? பிக் பாஸ் அசீமை துவைத்தெடுத்த நடிகை!!

அசீம் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் போது, சீரியல் இயக்குனரிடமே இதை கேட்பார். இந்த மாதிரி எல்லாம் கேவலமாக நடந்து கொள்வார் என நடிகை தேவி பிரியா தெரிவித்துள்ளார்.

நடிகை ஓபன் டாக் :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது, வரை தனது முன் கோபத்தாலும், தேவையற்ற சண்டைகளாலும் பெரிய அளவில் பேசப்பட்டு வருபவர் அசீம். இதற்கு முன் விஜய் டிவியின் பகல் நிலவு, சன் டிவியின் பூவே உனக்காக உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருடன் சேர்ந்து சீரியல்களில் நடித்த நடிகை தேவி பிரியா, இவர் குறித்த முக்கிய உண்மைகளை தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது நாங்கள் சேர்ந்து நடித்த சீரியலில் என்னுடைய பெயர் மகேஸ்வரி. அசீம், சீரியலின் டைரக்டரிடம் சென்று, மகேஸ்வரி கேரக்டரை நான் வாடி போடி என்று கூப்பிடலாமா? எனக் கேட்டாராம். எல்லோரும் தன்னை மட்டும் மரியாதையாக பேச வேண்டும் என சொல்பவர், அடுத்தவரை எப்படி இப்படி கூப்பிடலாமா? என கேட்கலாம்.

விக்ரமனால் வெடித்த பிரச்சனை., எதையும் கிழிக்க முடியாம தான வெளியே போன? மகேஸ்வரியை திட்டிய மணிகண்டன்!!

அம்மா நடிகையை கூட தன்னை வா போ என கூப்பிடக்கூடாது, அவர் என்னை அடிப்பது போன்ற காட்சிகள் வைக்க கூடாது என கண்டிஷன் போடும் அசீம், மற்ற நடிகர்களையும் கொஞ்சமாவது மதிக்க வேண்டும். அவரை நினைத்தால் எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக தான் வருகிறது. அவரோட கேரக்டரே அடுத்தவர்களை மட்டும் திட்டி பேசுவது தான் என, தனது மனதில் இருந்த மொத்த ஆதங்கத்தையும் ஒரு பேட்டியில் கொட்டி தீர்த்துள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here