
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இந்த சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பள்ளி பருவத்தை வைத்து எடுத்த முதல் சீசனும், கல்லூரியை மையமாக வைத்து எடுத்த செகண்ட் சீசனும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது பள்ளி பருவ கனாக்காணும் காலங்கள் சீரியலின் இரண்டாம் பாகம் ஓடிடி வாயிலாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடித்த பலரும் சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர்கள் தான். அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமானவர் தான் ராஜா வெற்றி பிரபு. தற்போது இவர் இந்த சீரியலில் கௌதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அவருடன் சேர்ந்து நடித்த தீபிகா என்பவரை கல்யாணம் செய்து கொள்ள போவதாக சமீபத்தில் செய்திகள் வைரலானது. இந்நிலையில் இணையத்தில் செய்திகள் வெளியானது போலயே இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்னர் இருந்தே இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். சமீபத்தில் இருவர் வீட்டிலும் வரன் பார்க்க ஆரம்பித்த நிலையில், தீபிகா ராஜாவிடம் நம்ம ஏன் திருமணம் செய்து கொள்ள கூடாது என்று கேட்டுள்ளார். அதன் பின்னரே இருவரும் வீட்டில் தெரிவித்து கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
—