
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் என ஆல் கிரவுண்டிலும் சிக்ஸர்களை பறக்கவிட்டவர் தான் சிலம்பரசன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சக்க போடு போட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது உலகநாயகன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அண்மையில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், அடுத்தடுத்து அப்டேட் குறித்து தகவல்கள் வெளியான வண்ணம் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இப்படத்திற்காக சிம்பு லண்டனுக்கு சென்று பயிற்சி கூட எடுத்து வருகிறாராம்.
IND vs PAK: ஜூன் 21 ல் இந்தியா பாகிஸ்தான் அணி மோதல்…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இந்நிலையில் இப்படத்தில் நடிக்க இருக்கும் ஹீரோயின் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல முன்னணி பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். மேலும் இப்படத்தில் நடிக்க அவர் 30 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். எனவே இப்படத்தில் அவர் நடிக்க வாய்ப்பு கம்மி தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.