
அண்மையில் தற்கொலை செய்து கொண்ட நடிகை தீபாவின் ஐபோன் காணாமல் போன நிலையில் தற்போது போலீசார் அதனை மீட்டு விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை தீபா:
சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக இருக்கும் இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யூட்யூப் ஷார்ட் போன்ற விடியோஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபல+6மானார் தான் நடிகை பவுலின் தீபா. கோலிவுட்டில் துப்பறிவாளன், ராட்சசன், தெறி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அண்மையில் வாய்தா என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தி இருப்பார். கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்நிலையில் அண்மையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீபாவின் உடலை கைப்பற்றி அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் கைப்பட எழுதியதாக கடிதம் ஒன்றை காவல்துறை கைப்பற்றியது. அந்த கடிதத்தில் நான் ஒரு நபரை தீவிரமாக காதலித்தாகவும், அவர் என் காதலை ஏற்றுக்கொள்ளாததால் சாக போகிறேன் என்று எழுதியுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு இப்படி ஒரு அழகான நாத்தனாரா?? அவங்களுக்கே டப் கொடுக்குறாங்களே!!
அவர் காதலித்த உதவி இயக்குநர் சிராஜுதீன் என்பவரை விசாரணை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகை தீபாவின் ஐபோன் காணாமல் போன நிலையில், அந்த மொபைலை காவல்துறையினர் மீட்டு எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து தற்கொலையா, கொலையா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.