
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இப்போது எதிர்பாரா பல சுவாரசிய திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழ் அடுத்து அர்ஜுனை பழி வாங்க என்ன செய்யப் போகிறார் என்பதுதான் கதையின் அடுத்த திருப்பமாக உள்ளது. இப்படி இருக்கையில் இந்த சீரியலில் முதலில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து விலகியவர் தான் தர்ஷனா. தனது நடிப்பின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்திய தர்ஷனா திடீரென இந்த சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால் இவர் மீண்டும் எப்போது சீரியலில் களம் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இப்படி இருக்கையில் நடிகை தர்ஷனா புது சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது என்ன சீரியல் என்பது பற்றி இன்னும் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.