ஜீ தமிழ் சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0
ஜீ தமிழ் சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!
ஜீ தமிழ் சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் பாரத நாயுடு. இவர் ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் ”மித்ரா” என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதன் பிறகு சன் டிவியின் ”தாலாட்டு” சீரியலில் நடித்து வந்தார். அப்போது தான் இவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதனால் இந்த சீரியலில் இருந்து இவரது கேரக்டர் சில நாட்களிலேயே விலக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் நடித்து வந்த மற்றொரு சீரியலான இரட்டை ரோஜா சீரியலில், இவரது பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை நடித்து வந்தார். இதனிடையே இவர்களுது baby shower புகைப்படங்களை மீடியாவில் ஷேர் செய்து வந்தனர். இவ்வாறு இவர் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் இந்த தம்பதிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை இணையத்தில் குவித்து வந்தனர்.

பையனுக்கு ஆட்டிசம்.., எதையும் வெளிய தெரியாம பார்த்துக்கிட்டேன்.., கதறும் பாக்கியலட்சுமி பிரபலம்!!

அந்த வகையில் தங்களுக்கு வாழ்த்து கூறிவந்த தனது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை இந்த தம்பதி அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதாவது ”நாங்கள் ஒரு குட்டி பெண் தேவதையை 23/3/2023 அன்று வரவேற்கிறோம். இப்போது தான் எங்கள் குடும்பம் முழுமையடைகிறது. மேலும் எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி”. என குறிப்பிட்டு இவ்வாறு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here