
இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை அசின். இவர் விஜய், அஜித், கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனியிடம் பிடித்தார். மேலும் தற்போது திருமணம் செய்து கொண்டு மேரேஜ் லைபில் செட்டிலாகிவிட்டார்.இப்படி இருக்கையில் இவர் குறித்து சினிமா பத்திரிகையாளர் ஒருவர் செய்யாறு பாலு ஷாக்கிங் நியூஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது சில்லுனு ஒரு காதல் படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் அசின் தான் கமிட்டானாராம்.ஆனால் குந்தவை கேரக்டரில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என முடிவானதால் , ஐஷுவாக நடிக்கும் படி அசினிடம் கூறியுள்ளனர். ஆனால் அசின் அதற்கு மறுத்து, நடித்தால் சூர்யாவின் மனைவியாக தான் நடிப்பேன் என கூறிவிட்டாரம். அதன் பிறகு தான் ஐஷு கேரக்டரில் பூமிகா கமிட்டானாராம்.