அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கல்லூரி மாணவன்.., தங்கம் பட நிகழ்ச்சியில் ஏற்பட்ட சலசலப்பு!!

0
அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கல்லூரி மாணவன்.., தங்கம் பட நிகழ்ச்சியில் ஏற்பட்ட சலசலப்பு!!
அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கல்லூரி மாணவன்.., தங்கம் பட நிகழ்ச்சியில் ஏற்பட்ட சலசலப்பு!!

நடிகை அபர்ணா பாலமுரளி நடித்த தங்கம் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி சட்ட கல்லூரியில் நடைபெற்ற போது மாணவர் ஒருவர் செய்த காரியம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

நடிகை அபர்ணா பாலமுரளி:

சினிமா துறையில் முன்னணி நடிகைககளில் பட்டியலில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர் தமிழில் சூர்யாவுடன் சேர்ந்து நடித்த சூரரை போற்று திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்காக நடிகை அபர்ணா பாலமுரளிக்கு தேசிய விருது கிடைத்தது. இப்பொழுது மலையாளத்தில் தங்கம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து படத்தின் புரோமோஷன் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவன் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தங்கம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஹீரோ வினித் சீனிவாசன், ஹீரோயின் அபர்ணா பாலமுரளி மற்றும் இயக்குனர் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். அப்போது கல்லூரி மாணவர் ஒருவர் அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்தை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்.

தமிழக அரசு பள்ளிகளில் பணியிடங்களை நிரப்ப 9,000 ஆசிரியர்கள் தேவை.., அன்பில் மகேஷ் அறிவிப்பு!!

அதை வாங்கி அபர்ணா பாலமுரளி அந்த மாணவனுக்கு கை கொடுத்தார். அதன் பின்னர் ஓவர் advantage எடுத்த அந்த மாணவர் அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அதாவது அபர்ணா பாலமுரளி தோள் மீது கையை போட முயற்சித்துள்ளார். அதை புரிந்து கொண்ட அவர் நைசாக நழுவி சென்றார். அந்த மாணவன் செய்த காரியத்தை பார்த்து படக்குழுவினர் மற்றும் கல்லூரி வளாகம் கண்டித்தது. அதன் பின்னர் அந்த மாணவன் மன்னிப்பு கேட்டு மறுபடியும் கையை கொடுக்க முயன்ற போது கையை கொடுக்காமல் அபர்ணா பாலமுரளி சிரித்து பதிலடி கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here