உன்னி கிருஷ்ணன் பாடலுக்கு உயிரூட்டிய அனுபமா…!இவங்களுக்குள்ள இவ்வளவு திறமையா…!!!

0

மலையாள திரைத்துறை  மூலம் சினிமா உலகிற்கு வந்தவர் நடிகை  அனுபமா பரமேஸ்வர். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் உன்னி கிருஷ்ணன் அவர்களின் குரலில் அமைந்த ‘என்னவளே அடி என்னவளே’ என தொடங்கும் பாடலை  தனது  இனிமையான குரலில் பாடி உள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிரேமம் என்ற மலையாள மொழி படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து புகழ் பெற்றவர். அதன் பிறகு தமிழில் அவர் தனுஷுக்கு ஜோடியாக கொடி  படத்தில் நடித்துள்ளார். இருப்பினும் அந்த படம் அவருக்கு அந்த அளவிற்கு கை கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தனது நடிப்பு திறமையை காட்ட தொடங்கினார்.

மேலும் ,சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவ்வாக இருந்து வரும் அனுபமா தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் காதலன் படத்தில் இடம் பெற்ற, உன்னி கிருஷ்ணன் பாடிய ‘என்னவளே அடி என்னவளே’ என தொடங்கும் பாடலில் ‘வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்…’ என்ற வரிகளை தன்னுடைய இனிமையான குரலால் பாடி அசத்தி உள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here