அஜித்தின் ரீல் மகளாக நடித்த அனிகா இன்ஸ்டா பக்கத்தில் தனது அழகிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
அனிகா
என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படத்தில் அஜித்துக்கு ரீல் மகளாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த அனிகா, இப்போது முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார். இது தவிர புட்ட பொம்மா என்கிற தெலுங்கு படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்க உள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகி விட்டாள் அனிகா. இப்படி தனது கேரியரில் பிசியாக இருக்கும் அனிகா அண்மையில் தனது 18-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.
இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தாலும், குழந்தையாக பார்த்த அனிகாவுக்கு 18 வயசாயிருச்சு என ஆச்சரியத்தில் தத்தளித்து வருகின்றனர். அனிகா பிறந்த நாளின் போது எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இரண்டு நாட்கள் ஆகியும் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.