நடிகர் அஜித்தின் ரீல் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.., இணையத்தை பதற வைக்கும் புகைப்படம் – நெட்டிசன்கள் காட்டம்!!

0
நடிகர் அஜித்தின் ரீல் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.., இணையத்தை பதற வைக்கும் புகைப்படம் - நெட்டிசன்கள் காட்டம்!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் தான் நடிகை அனிகா. இவர் கோலிவுட் சினிமாவில் என்னை அறிந்தால், விஸ்வாசம், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் பார்ப்பதற்கு இவர் நயன்தாராவைப் போலவே இருப்பதால் ரசிகர்கள் இவரை குட்டி நயன்தாரா என்று செல்லமாக அழைத்து வருவதுண்டு.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து இவர் ”ஓ மை டார்லிங்” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். மேலும் இப்படத்தில் முத்த காட்சிகளில் இவர் நடித்திருந்ததால் நெட்டிசன்கள் இதனை சர்ச்சைக்கு உள்ளாக்கியிருந்தனர். அதற்கு இவர், இப்படம் முற்றிலும் காதல் கலந்த ரொமான்டிக் படம் என்பதால் இந்த காட்சிகளில் நடிப்பது தவிர்க்க முடியாத ஒன்று என பதிலளித்திருந்தார்.

திசை மாறிய மோச்சா புயல்., தப்பித்த தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள்?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!


மேலும் தற்போது இவர் PT- சார், மற்றும் கோதை அரசன் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் குறித்து தற்போது இணையத்தில் ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இவருடைய புகைப்படத்துடன் கூடிய ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்ட், ”நந்தினி 16/7/2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில் அகால மரணமடைந்தார் என்று ஒட்டப்பட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இந்த போஸ்டர் இவர் நடித்துவரும் ஒரு படத்திற்காக ஒட்டப்பட்டது என தற்போது தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here