என்ன கயல் ஆனந்தி.., இவளோ பெரிய விஷயத்தை அசால்ட்டா மறைச்சுட்டீங்க.., வெளிவந்த முழு உண்மை!!!

0
என்ன கயல் ஆனந்தி.., இவளோ பெரிய விஷயத்தை அசால்ட்டா மறைச்சுட்டீங்க.., வெளிவந்த முழு உண்மை!!!
என்ன கயல் ஆனந்தி.., இவளோ பெரிய விஷயத்தை அசால்ட்டா மறைச்சுட்டீங்க.., வெளிவந்த முழு உண்மை!!!

சமீபத்தில் நடிகர் கதிர் நடித்த யூகி படத்தின் புரொமோஷன் விழாவில் நடிகை கயல் ஆனந்தி பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை கயல் ஆனந்தி:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை கயல் ஆனந்தி. தற்போது இவர் நடிப்பில் யூகி, டைட்டானிக்- காதலும் கவுந்து போகும், ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் அடுத்த மாதம் யூகி படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படி பிசியாக நடித்து வரும் நடிகை ஆனந்திக்கு கடந்த ஆண்டு இணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் திருமணம் நடந்த பின்னரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சமீபத்தில் யூகி படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கயல் ஆனந்தி பேசியதாவது, இப்படம் எனக்கு பர்சனலி ரொம்ப ஒத்து போச்சு, ஏனென்றால் இப்படத்தில் நான் கர்ப்பமான பெண்ணாக நடித்தேன்.

தனது இரட்டை குழந்தைகள் புகைப்படத்தை வெளியிட்ட நமீதா.., லைக்ஸ்களை குவித்த ரசிகர்கள்!!

ஆனால் இப்படத்தில் நடிக்கும் பொழுது நான் உண்மையாகவே கர்ப்பமாக இருந்தேன் என்று தெரிவித்தார். மேலும் சாக்ரடீஸ் – ஆனந்தி இருவருக்கும் குழந்தை பிறந்துவிட்டது என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here