Saturday, May 15, 2021

இதுல கூடவா இப்படி வித்தியாசமா பண்ணுவீங்க – வைரலாகும் அமலா பாலின் போட்டோஷூட் அட்டகாசங்கள்!!

Must Read

தமிழ் திரையில் பல நடிகைகள் வந்து போனாலும் சிலருக்கு மட்டுமே ரசிகர்கள் மனதில் என்றும் இடம் இருக்கும். அப்படிப்பட்ட நடிகையான அமலா பால் தற்போது இன்ஸ்டாவில் எப்போதும் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அமலா பால்

மாடலிங் துறையில் இருந்து தான் பல நடிகைகள் வெள்ளித்திரைக்கு வருவர். அப்படி அல்லாமல் சினிமாத்துறை பின்னணி கொள்ளாத குடும்பத்தில் இருந்து வந்தவர் தான், நடிகை அமலா பால். இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். முதன் முதலாக மலையாள திரைப்படம் ஒன்றில் தான் அமலா பால் நடித்தார்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

அதற்கு பின்பாக தமிழ், தெலுங்கு போன்ற துறைகளிலும் தனது கவனத்தினை செலுத்தினார். இதனை அடுத்து தமிழில் ‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் நடித்தார். அந்த திரைப்படத்தில் நடித்ததால் அமலா பால் பல விமர்சனங்களை சந்தித்தார். இதனை அடுத்து தான் நடிக்கும் படங்களின் கதையினை கவனமாக தேர்ந்தெடுத்தார்.

இதனை அடுத்து இவர் தொடர்ச்சியாக தெய்வமகன், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அப்போது இந்த படங்களை இயக்கிய இயக்குனர் ஏஎல் விஜய்யினை காதலித்தார். இருவரும் தங்களது பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு பின்பாக அமலா பால் கவனமாக கதைக்களங்களை தேர்வு செய்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் சவாலான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். உதாரணத்திற்கு அவரது ஆடை திரைப்படத்தினை கூட கூறலாம். இப்படியாக இருக்கும் நடிகை அமலா பால் தனது சமூகவலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.

இது வரை இல்லாததாக அமலா பால் இன்ஸ்டாவில் கிரிட் (grid) என்று கூறப்படும் அமைப்பில் தனது புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இவர் ரோஜா வண்ண சேலை அணிந்து கேண்டிட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் அள்ளுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு.அரவிந்த் மண்டபங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளளார். மேலும் அவர் அவ்வாறான நிகழ்ச்சிகளை வீடுகளில் நடத்தவும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -