
தென்னிந்திய திரையில் தவிர்க்க முடியாத ஹீரோயின்களில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் அமலா பால். தமிழ் சினிமாவில் இவர் நடித்த ”மைனா” திரைப்படம் தான் இவரது கெரியருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதை தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் புகழின் உச்சிக்கு சென்றார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்கிடையில் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த வாழ்க்கை இவர் நினைத்தது போல அமையாததால் அதில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் தனது கெரியரில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார். அதன் பிறகு அடுத்தடுத்து சில சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர் கடந்த 2 வருடங்களாக திரையுலகில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.
மேலும் தன்னை பற்றிய அப்டேட்களை மட்டும் தொடர்ந்து தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது கூட தனது நியூ ஹாட் கிளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை குவித்துள்ளார்.