அமலா பாலின் பணமோசடி வழக்கு.., பவ்நிந்தர்சிங் தத்துக்கு ஜாமீன் – வானூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0

அண்மையில் நடிகை அமலாபால் அளித்த பண மோசடி வழக்கில் கைதான பவ்நிந்தர்சிங் தத்துக்கு நிபந்தனை அற்ற ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை அமலாபால்:

தமிழ் சினிமா துறையில் தற்போது முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் தான் நடிகை அமலாபால். இவர் தமிழ், மலையாள படங்களில் அதிகமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். மேலும் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவான தளபதி விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்து அசத்தினார். தற்போது கடாவர் திரைப்படத்தில் நடித்தது மட்டுமின்றி தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். இதனை தொடர்ந்து தலைவா படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.எல். விஜய்யை மணமுடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் திருமணம் ஆகி சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துள்ளனர். வாழ்க்கை பிரச்சனை முடிந்து இப்பொழுது ஓரளவிற்கு ஓய்ந்துள்ள அவருக்கு இப்பொழுது வேறு பிரச்சனை முளைத்துள்ளது. இப்பொழுது பஞ்சாப்பை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும் பாடகருமான பவ்நிந்தர்சிங் தத்‌ என்பவர் மேல் அமலா பால் கடந்த மாதம் 29ம் தேதி பணமோசடி செய்ததாக கூறி புகார் அளித்ததன் பெயரில் பவ்நிந்தர்சிங் தத்‌ கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைதான பவ்நிந்தர்சிங் தத்துக்கு நிபந்தனை அற்ற ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, பவ்நிந்தர்சிங் தத் மற்றும் அவரது உறவினர்கள் 20 லட்சம் பண மோசடி செய்ததாகவும், அமலாபால் மற்றும் பவ்நிந்தர்சிங் தத் தனிமையில் இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் புகாரளித்திருந்தார். இந்த காரணத்தால் பவ்நிந்தர் சிங் தத் கைது செய்யப்பட்டு 13 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பவ்நிந்தர் சிங் தத் சார்பில் ஜாமீன் கேட்டு நேற்று வானுர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் பவ்நிந்தர்சிங் தத்துக்கு நிபந்தனை அற்ற ஜாமீன் வழங்கி நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் அவரது உறவினர்களுக்கும் ஜாமீன் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here