ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “சொப்பன சுந்தரி” படத்தின் வெளியீட்டு தேதி ரிலீஸ்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

0
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த "சொப்பன சுந்தரி" படத்தின் வெளியீட்டு தேதி ரிலீஸ்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் சொப்பன சுந்தரி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .

சொப்பன சுந்தரி:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர், தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் முதன்மையாக நடித்த படங்களை அனைத்தும் சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவான சொப்பன சுந்தரி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வீடியோ மற்றும் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுபோக லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பதால் படத்தோட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.., இனி மலிவு விலையில் இது கிடைக்கும்.., அரசு அறிவிப்பு!!!

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதாவது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த சொப்பன சுந்தரி திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்து வெளியான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here