எந்த கடவுளும் ஆண், பெண் என பிரிச்சு பார்க்கல.., சபரி மலை குறித்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பதிலடி

0
எந்த கடவுளும் ஆண், பெண் என பிரிச்சு பார்க்கல.., சபரி மலை குறித்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பதிலடி
எந்த கடவுளும் ஆண், பெண் என பிரிச்சு பார்க்கல.., சபரி மலை குறித்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பதிலடி

தென்னிந்திய தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பிறகு பெண்கள் மையப்படுத்தி இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்க முட்டை மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அவர், அதற்கடுத்து எங்க வீட்டு பிள்ளை, க.பெ. ரணசிங்கம், இரண்டாம் திட்டம் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் இவர் நடித்த டிரைவர் ஜமுனா திரைப்படம் தியேட்டரில் ரிலீசாகி கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் 9 படமும், மலையாளத்தில் 3 படமும் என பிசியாக நடித்து வருகிறார். அதில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தை குறித்து பேட்டி ஒன்றில் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து கேள்வி எழுப்ப பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்துக்கு இவ்ளோ பெரிய பையனா? எவளோ அழகா இருக்காங்க பாருங்களே!!

அதற்கு அவர் கூறியதாவது , பொதுவாக கிராமம் மற்றும் நகரம் என எல்லா இடங்களிலும் ஆணாதிக்கம் இருந்து வருகிறது. ஆனால் கடவுள் பொறுத்தவரை ஆண் பெண் இருவரும் ஒன்று தான். எந்த கடவுளும் ஆண்கள் மட்டும் தான் எங்களை வழிபட வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி ஏதாவது கடவுள் சொல்லிருந்தா சொல்லுங்க நான் நம்புறேன். நான் இது போன்ற கட்டுப்பாடுகளை ஒருபோதும் நம்ப மாட்டேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here