விஜய் பட வில்லனை காதலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

0
விஜய் பட வில்லனை காதலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!
விஜய் பட வில்லனை காதலிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான, ஐஸ்வர்யா லட்சுமி பிரபல விஜய் பட வில்லனை காதலிப்பதாக போட்டோவுடன் தகவல் வெளியாகி உள்ளது.

ஐஸ்வர்யா லட்சுமி :

தமிழில் விஷாலின் ஆக்சன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படங்களை தொடர்ந்து ஜகமே தந்திரம், கேப்டன், புத்தம் புது காலை விடியாதா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் இவர் அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான பொன்னியின் செல்வன் படத்தில், பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். விரைவில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பிரபல வில்லன் நடிகர் அர்ஜுன் தாஷூடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.

தமிழில் மாஸ்டர் என்ற படத்தின் மூலம், வில்லனாக கலக்கியவர் தான் அர்ஜுன் தாஸ். இவருடன் சேர்ந்து ஜோடியாக ஐஸ்வர்ய லட்சுமி புகைப்படம் எடுத்துள்ளதால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்தி கிளம்பி உள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here