நடிப்பு எல்லாம் ஒரு வேலையா…..,நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்….,

0
நடிப்பு எல்லாம் ஒரு வேலையா.....,நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்....,
நடிப்பு எல்லாம் ஒரு வேலையா.....,நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்....,

தற்போது சினிமாத் துறையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர், நடிகைகள் பலரும் ஒரு காலத்தில் வாய்ப்புக்காக அலைந்து திரிந்தவர்கள் தான். குறிப்பாக, சினிமாவுக்காக தங்களது பெற்றோரையும், குடும்பத்தையும் கூட விட்டு வந்தவர்களைக் குறித்தும் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால் சினிமாவை நேசிக்கும் மக்கள் அதைத் தொழிலாக பார்ப்பது அபூர்வம் தான்.

அப்படி, சினிமா பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சினிமாவில் அறிமுகமான சில நாட்களிலேயே, ‘பொன்னியின் செல்வன்’ மாதிரியான திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கும் ஐஸ்வர்யாவின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்திருக்கிறது.

நிஜ வாழ்க்கையில் தனது ரோஸை கண்டுபிடித்த ஜாக்…..,இந்திய பெண்ணுடன் டிகாப்ரியோ காதல்……,

இது குறித்து பேசிய அவர், ‘நான் நடிகையாவதற்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவம் படித்து பயிற்சியில் இருக்கும் போது நடிகையானேன். எனது பெற்றோரின் பார்வையில் சினிமா ஒரு மரியாதைக்குரிய தொழிலாக இருந்தது இல்லை. எனது பார்வையில் சினிமாவுக்காக நான் தினசரி போராட வேண்டி இருந்தது’ என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here