
நடிகை அதிதி சங்கர் மாவீரன் படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் அடுத்து நடிக்க இருக்கும் படத்தை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை அதிதி ஷங்கர். நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களை தன் வசம் இழுத்த அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படத்தின் ஷூட்டிங் கடைசி கட்டத்தை நெருங்கிய நிலையில் அதிதி சங்கர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 80ஸ், 90ஸ் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வந்த மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் அறிமுகமாகும் படத்தில் நடிக்க இருக்கிறார் அதிதி சங்கர்.
மேலும் ஆகாஷ் மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இப்படத்தை ஆரம்பம், பில்லா போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க இயக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முரளியின் மூத்த மகனான நடிகர் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.