பிக் பாஸ் பெண் போட்டியாளரிடம் அத்துமீறிய பிரபல சேனல் நிர்வாகி – வெளியான பகிர் தகவல்!!

0

பிக் பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாசலம், பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்த போது அங்கு இருந்த ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

அபிராமி வெங்கடாசலம்:

ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் துவங்கிய அபிராமி வெங்கடாசலம் நடிகர் விஜய் தேவகோண்டா நடித்து, ஆனந்தி சங்கர் இயக்கிய நோட்டா படத்தில் முதன்முதலில் திரைத்துறைக்கு அறிமுகமானார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்  3யில் கலந்து கொண்டு மக்களிடம் நன்கு பிரபலமானார். அதை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் ஹீரோவாக நடித்த நேர் கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் பரதநாட்டியதற்கான டாக்ட்ரேட் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்த போது அங்கு இருந்த முக்கியஸ்தர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறியுள்ளார். மேலும் அந்த நபர் யார் என்றும், எந்த தொலைக்காட்சி என்றும் அவர் கூறவில்லை. இவர் தெரிவித்துள்ள இந்த செய்தி தற்போது சினி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here