இதுக்காக தான் நான் வாரிசு ஆடியோ லான்ச்சுக்கு போகல.., யோகி பாபு பேட்டி!!

0
இதுக்காக தான் நான் வாரிசு ஆடியோ லான்ச்சுக்கு போகல.., யோகி பாபு பேட்டி!!
இதுக்காக தான் நான் வாரிசு ஆடியோ லான்ச்சுக்கு போகல.., யோகி பாபு பேட்டி!!

விஜய் நடித்த வாரிசு படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு யோகி பாபு கலந்து கொள்ளாத காரணம் குறித்து பேட்டியில் பேசியுள்ளார்.

நடிகர் யோகிபாபு:

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து, இப்பொழுது முன்னணி நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யோகி பாபு. சமீபத்தில் இவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பொம்மை நாயகி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படம் அடுத்த மாதம் 3ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் புரொடக்சன் நிகழ்ச்சியை முடித்துவிட்டு யோகி பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நீங்கள் பெரிய படத்துக்கு மட்டும் தான் ஆடியோ நிகழ்ச்சி போன்ற விழாவில் கலந்து கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுந்தது.

விஜய்க்கு வில்லனாகும் சிம்பு., தளபதி 67 நடக்கும் தரமான சம்பவம்! லீக்கான சீக்ரெட் அப்டேட்!!

அதற்கு காண்டான யோகி பாபு, தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கும் தான் போகவில்லை. அது என்ன சின்ன படமா சொல்லுங்க என்று கோபப்பட்டார். நான் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறேன். அவர்கள் அழைக்கும் பொழுது, நான் படப்பிடிப்பிலோ அல்லது வெளி நாட்டிலோ இருப்பதால் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய நிலைமை இயக்குனர்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here