Tuesday, May 18, 2021

‘விவேகானந்தன்’ சின்ன கலைவாணராக மாறிய கதை – இதோ ஓர் தொகுப்பு!!

Must Read

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது விவேக் பற்றிய முழு தொகுப்பை காண்போம்.

நடிகர் விவேக்:

இவர் கடந்த 1961ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி கோவில்பட்டி பகுதியில் பிறந்தார். இவரது முழு பெயர் விவேகானந்தன். விவேக் தனது பள்ளி படிப்பினை மதுரையில் முடித்து பின்பு, அங்குள்ள அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் மற்றும் எம்.காம் முடித்தார். தொடக்கத்தில் நடிகர் விவேக் மொபைல் ஆபிரேக்டராக பணி புரிந்தார். பின்பு சென்னைக்கு வந்து டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளர் பணியில் சேர்ந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

அதன் பின்பு கலைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் சினிமாவிற்கு வந்த அவர் கடந்த 1987ம் ஆண்டு முதல் தனது கலைப்பயணத்தை தொடங்கினார். இவர் தமிழ் சினிமாவில் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தில் ஓர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்பு இவரது நடிப்பில் 1989ம் ஆண்டு ‘புது புது அர்த்தங்கள்’ என்னும் படம் வெளியானது. அந்த படத்தில் இவர் பேசிய ‘இன்னக்கி செத்தா நாளைக்கு பால்’ என்னும் வசனம் மக்கள் அனைவராலும் மிக வெகுவாக கவரப்பட்டது.

“மக்களின் நாயகன்” சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக அவதாரம் எடுத்தார் விவேக். இவர் தனது நகைச்சுவையில் சமூக கருத்துக்களை உள்ளடக்கி பல நகைச்சுவை மூலம் மக்களை பெரிய அளவில் கவர்ந்தார். இவரது நகைச்சுவை லஞ்சம், மக்கள் தொகை அதிகரிப்பு, மூட நம்பிக்கை, அரசியல் ஊழல்கள் போன்றவற்றை சார்ந்தே அமையும். இதனால் இவரை மக்கள் அனைவரும் ‘சின்ன கலைவாணர்’ என்று அழைத்து வந்தனர்.

விவேக் பெற்ற விருதுகள்:

  • டாக்டரேட் பட்டம் – 2005ம் ஆண்டு
  • பத்மஸ்ரீ – 2009ம் ஆண்டு
  • கலைவாணர் விருது – 2006ம் ஆண்டு
  • பிலிம் பேர் விருது – 2002,2003,2004ம் ஆண்டுகள்
  • மாநில அளவிலான விருது – 1999,2002,2003,2005,2007ம் ஆண்டுகள்
  • தேசிய அளவிலான விருது – 2003,2004,2008,2011ம் ஆண்டுகள்
  • ஏசியாநெட் விருது – 2009ம் ஆண்டு
  • எடிசன் விருது – 2007ம் ஆண்டு

இறப்பு:

தமிழ் சினிமாவில் சின்ன கலைவனராக திகழ்ந்த விவேக், நேற்று(ஏப்ரல் 16) மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 17) காலை 4.35 மணி அளவில் இயற்கை எய்தினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜனார்த்தனன் கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி – ஷாக்கில் ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்த்தனன் கதாபாத்திரத்தில் இதற்கு முன்னாள் நடித்த வெங்கட் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் சுபு பாண்டியன்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -