கோலிவுட் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். தற்போது இவர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ள ”லால் சலாம்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் தீபாவளி அன்று இணையத்தில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் விஷ்ணு உலக நாயகன் மற்றும் பாலிவுட் ஸ்டார் அமீர் கானுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், ஒருவேளை விஷ்ணு பாலிவுட் படத்தில் நடிக்க கமிட்டாகி விட்டாரா? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.