எப்படியோ கடைசியில் கல்யாணத்தை வச்சுட்டாரு – திருமண பத்திரிகையை வெளியிட்ட விஷ்ணு விஷால்!!

0
இரண்டாவது மனைவியுடன் திருமண நாளை அந்த இடத்தில் கொண்டாடிய விஷ்ணு விஷால் - இணையத்தில் வைரல்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது திருமணம் குறித்த விவரத்தினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான், நடிகர் விஷ்ணு விஷால். இவர் முதன் முதலாக “வெண்ணிலா கபடி குழு” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் ஒரு கிரிக்கெட் வீரரும் ஆவார். “வெண்ணிலா கபடி குழு” திரைப்படத்திற்கு பின்பாக இவருக்கு நல்ல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸை முன்னேற்ற களமிறங்கும் ஜீவா, கதிர் – அப்போ ஜனார்த்தனன் நிலைமை??

ஒரு சில ஹிட் படங்களில் நடித்துள்ள விஷ்ணு விஷால் ரஜினி நட்ராஜ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவரும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டனர். இப்படியான சூழலில், இவர் பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை காதலித்து வருகிறார் என்ற செய்திகள் பரவி வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இது குறித்து இரு தரப்பில் இருந்தும் எந்த வித பதிலும் வரவில்லை. இப்படியாக இருக்க, ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூடிய விரைவில் தங்களது திருமணம் குறித்த விவரத்தினை அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தனர். தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here