அதிரடியாக உருவாகும் விஷ்ணு விஷாலின் FIR படத்தின் இரண்டாம் பாகம்.., அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியீடு!!

0
அதிரடியாக உருவாகும் விஷ்ணு விஷாலின் FIR படத்தின் இரண்டாம் பாகம்.., அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியீடு!!
அதிரடியாக உருவாகும் விஷ்ணு விஷாலின் FIR படத்தின் இரண்டாம் பாகம்.., அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியீடு!!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான FIR படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை அவரே இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால்:

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூலை அள்ளி குவித்தது. இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படைப்பில் உருவாக இருக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது மோகன் தாஸ், ஆரியன் போன்ற படங்களை கை வசம் வைத்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் வெளியாகும் என்றார் நடிகர் விஷ்ணு விஷால். அதே போல் FIR படத்தின் இரண்டாம் பாகம் வர இருப்பதாக விஷ்ணு விஷால் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு., 26 காளைகளை அடக்கி பரிசை தட்டிச் சென்ற காளையர்! விவரம் உள்ளே!!

அதாவது மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் எப்.ஐ.ஆர். அதுபோக கவுதம் மேனன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா, ரெய்சா வில்சன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் தயாராகும் என்று இணையத்தில் நடிகர் விஷ்ணு விஷால் அப்டேட் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here