விஷால் செய்யும் தப்புக்கு துணை போகும் கார்த்தி.., தயாரிப்பாளருக்கு வந்த மோசமான நிலைமை!!

0

நடிகர் விஷால் அடுத்து நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி படத்தை குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால்:

தமிழ் சினிமா வட்டாரங்களில் முன்னணி நட்சத்திர பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் விஷால். இவர் கடந்த 2004ம் ஆண்டு வெளியான செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். தான் நடித்த முதல் படத்திலேயே மக்களின் ஆதரவைப் பெற்று பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

அந்த வரிசையில் சண்டக்கோழி, பூஜை, பாண்டியநாடு போன்ற படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் விஷால் நடிப்பில் அடுத்ததாக லத்தி சார்ஜ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகர் விஷால் பெரிய சிக்கல் ஒன்றை சந்தித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 40 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் சென்றுள்ளார். அதன் பின்னர் ஷூட்டிங் வருவதை தட்டி கழித்துள்ளார். அவரை நம்பி பல கோடி செலவு செய்து படத்தின் தயாரிப்பாளர் செட் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரூ.3 கோடி வரை தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

விஷால் திரைப்பட சங்கத்தின் செயலாளராக வேறு இருப்பதால் அவரிடமே கம்பளைண்ட் கொடுக்க முடியாத காரணத்தால் இந்த நஷ்டத்தை குறித்து நடிகர் கார்த்தியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் சுற்றுவட்டாரம் முழுவதும் அவரது நண்பர்கள் கூட்டமாக இருப்பதால் புகார் அளித்தும் பயனில்லாமல் போய்விட்டது. இது குறித்து நடிகர் விஷாலிடம் கேட்டபோது உதயநிதி என்னுடைய நண்பன் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் மனமுடைந்து சோகத்தில் திரிகிறார் மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here