‘நீங்க சினிமால மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ தான்’ – சாலையோர மக்களுக்கு தினமும் உணவு வழங்கும் விஷால்!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் சினிமா துறை சிறப்பாக இருக்க பல்வேறு பணிகளை செய்து வருவார். தற்போது அதே போல் ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்களுக்கும் உதவி வருகிறார்.

நடிகர் விஷால்:

தமிழ் சினிமாவில் பல ஹிட்டுகளை கொடுத்து சினிமா துறையில் கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் விஷால். இவர் நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம் என பல பொறுப்புகள் கவனித்து வருகிறார். மேலும் சினிமா துறை அனைத்து விதத்திலும் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருபவர். அதுமட்டுமல்லாமல் திருட்டு விசிடி ஒளிவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் விஷால்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அவர் சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல நிஜத்திலும் ஹீரோ தான் என்பதை உணர்த்தும் வகையில் ஓர் செயலை செய்துள்ளார். இது அனைத்து தரப்பினரிடமும் பாராட்டை பெற்று வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சாலை ஓரத்தில் இருக்கும் மக்கள் அன்றாட உணவிற்காக போராடி வருகிறார்கள்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்திய நாட்டின் மக்கள் தொகை – நிபுணர்கள் கருத்து!!

தற்போது அவர்களுக்கு உதவிபுரியும் வகையில் நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் தினசரி 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். அதேபோல் தெருக்களில் சுற்றி திரியும் கால்நடைகளுக்கும் தனது தேவி அறக்கட்டளை மூலம் உணவு வழங்கி வருகிறார். தற்போது இவரது செயல் கண்டு அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here