அப்போ விஷாலுக்கு முதல் படம் செல்லமே இல்லையா?? எந்த படத்துல நடிச்சாரு தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்!!

0
vishal

தமிழ் திரையுலகின் ஆக்சன் நாயகனாக வலம் வரும் நடிகர் விஷால் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

நடிகர் விஷால்

திரைப்பட தயாரிப்பாளரின் மகனான நடிகர் விஷால் தமிழ் திரையுலகின் ஒரு ஆக்சன் நாயகன். ஆந்திரா மாநிலத்தை சொந்த ஊராக கொண்ட விஷால் வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னை தான். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வந்த விஷால், ‘செல்லமே’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மக்களால் ரசிக்கப்படும் நடிகராக மாறினார் விஷால். ஆக்சன் கதைகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் விஷாலுக்கு ‘சண்டக்கோழி’, ‘தாமிரபரணி’, ‘திமிரு’ ஆகிய திரைப்படங்கள் சிறப்பான திரைப்படங்களாக அமைந்தது.

இவர் நடித்துள்ள ஒவ்வொரு திரைப்படங்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது விஷாலின் சிறப்புகளில் ஒன்றாகும். விஷால் நடிகராக மட்டுமல்ல, விஷால் பிலிம் ப்ரொடக்சன் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

‘இப்படி செய்றதெல்லாம் செஞ்சுட்டு வெக்கமில்லாமல் எப்படி நடிக்க முடியுது’ – கண்ணம்மாவை பற்றி பாரதியிடம் ஏத்தி விடும் வெண்பா!!

விஷால் நடிப்பில் சமீபத்தில் ‘சக்ரா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ‘எனிமி’, ‘துப்பறிவாளன் 2’ ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளது.

இப்படி இருக்க சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்னாக விஷால் தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் பெயர் ‘ஜாடிக்கு ஏத்த மூடி’. இத்திரைப்படத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here