காரில் சடலமாக கிடந்த பிரபல நடிகர்., இறப்பில் மர்மம்., தீவிர விசாரணையில் போலீசார்!!

0
காரில் சடலமாக கிடந்த பிரபல நடிகர்., இறப்பில் மர்மம்., தீவிர விசாரணையில் போலீசார்!!
காரில் சடலமாக கிடந்த பிரபல நடிகர்., இறப்பில் மர்மம்., தீவிர விசாரணையில் போலீசார்!!

மலையாள திரையில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் வினோத் தாமஸ். இவர் அய்யப்பனும் கோஷியும், ஒரு முறை வந்து பார்த்தாயா, ஹேப்பி வெட்டிங் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் படங்கள் மட்டுமல்லாது சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வந்த இவர் இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவின் கோட்டயத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் மதுபான விடுதியின் வாசலில் இவரது கார் வெகு நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதை கவனித்த செக்யூரிட்டி அவரது காரின் கண்ணாடியை தட்டியுள்ளார். ஆனால் உள்ளே இருந்தவர் பதில் அளிக்காததால் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த போலீஸ் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளிருந்த தாமஸை வெளியில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் இவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இவரது இறப்புக்கான காரணம் என்னவென இதுவரை தெரியவில்லை. மேலும் இது குறித்த விசாரணையில் போலீசார் தீவிரம்.

லாட்ஜில் 15 வயது சிறுமியை சீரழித்த இரண்டு இளைஞர்கள்.., கொக்கி போட்டு தூக்கிய காவல்துறை.., என்ன நடந்தது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here