அரிவாளால் வெட்டு.. நிஜத்தில் வில்லனாக மாறிய பிரபல மலையாள நடிகர்.. போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!

0
அரிவாளால் வெட்டு.. நிஜத்தில் வில்லனாக மாறிய பிரபல மலையாள நடிகர்.. போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!

மலையாள பட வில்லன் நடிகர் வினீத் தட்டில் டேவில் கொடுத்த கடனை கேட்ட நபரை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள பட வில்லன் கைது:

மலையாள படங்களில் தற்போது முன்னணி வில்லனாக வலம் வருபவர் நடிகர் வினீத் தட்டில் டேவில். கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை தன் வசம் இழுத்து கொண்டார். இந்த படம் 3 தேசிய விருதுகளை வென்று அவரது கேரியரில் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பித்தக்கது.

சினிமாவில் மட்டும் வில்லனாக நடித்த நடிகர் வினீத் தட்டில் டேவில் தற்போது நிஜத்திலும் ஒரு நபருக்கு வில்லனாக மாறிவிட்டார். அதாவது, நடிகர் வினீத்திடம் ஆலப்புழாவை சேர்ந்த அலெக்ஸ் என்பவர் தன்னிடம் இருந்த ரூ.6 லட்சம் பணத்தை கடனாக கொடுத்து உள்ளார். அண்மையில் வாங்கிய கடனில் பாதி கடனை அடைத்துவிட்டார் வினீத். மீதி பணத்தை கட்ட முடியாமல் திண்டாடி உள்ளார். இதனால் அவரால் அந்த கடனை அடைக்க முடியவில்லை என்பதால், கொடுத்த கடனை கேட்பதற்கு வந்த நபரை பேசி சமாளித்து உள்ளார்.

தமிழகத்தில் ஆகஸ்ட் 1 அன்று உள்ளூர் விடுமுறை.. ஆனந்தத்தில் மக்கள்: மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

சமாதானம் ஆகாத அலெக்ஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் கோபம் அடைந்த நடிகர் வினீத் கத்தியால் அலெக்ஸை சரமாரியாக வெட்டியுள்ளார். அதன் பிறகு வினீத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here