விக்ரம் மற்றும் துருவ்வின் மகான் பட ரிலீஸ் தேதி வெளியீடு – சற்று முன் வெளியான அதிரடி அப்டேட்!!

0

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் மகான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகான் படம் ரிலீஸ் :

நடிகர் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வரும் படம் மகான். தந்தையும் மகனும் இணைந்து நடித்துள்ளதால், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படத்தை, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.

தற்போது வரை இந்த படத்தின் இரண்டு மோஷன் போஸ்டர்கள் வெளியாகின. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வருகிற பொங்கலுக்கு இந்தப் படம் நேரடியாக, ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த அறிவிப்பைக் கேட்ட ரசிகர்கள், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here