சியான் விக்ரமுக்கு அடித்த ஜாக்பாட் – ஆதித்த கரிகாலனுக்கே சவால் விடும் புது ரோல்! இயக்குனர் யார் தெரியுமா?

0
சியான் விக்ரமுக்கு அடித்த ஜாக்பாட் - ஆதித்த கரிகாலனுக்கே சவால் விடும் புது ரோல்! இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் சியான் விக்ரம், மீண்டும் வரலாற்று கதை அம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அது குறித்த அப்டேட் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ் காட்டும் விக்ரம் :

தமிழ் சினிமாவின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை, இயக்குனர் மணிரத்தினம் மிக பிரம்மாண்டமாக எடுத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் வெளியான இந்த படம், வசூலில் கல்லா கட்டி வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த இந்த படத்தில், ஆதித்த கரிகாலனாக நடித்திருந்த சியான் விக்ரம் தனது நடிப்பால், ரசிகர்களின் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்தார். இவரின் நடிப்பு இந்த படத்தில் தனியாக பேசப்பட்டது. தற்போது இந்த படத்தைத் தொடர்ந்து, பாலிவுட் இயக்குனர் அலாவுகிக் தேசாய் இயக்கும் ராமாயண கதையம்சம் கொண்ட வரலாற்று படத்தில், விக்ரம் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி 67ல் விஜய்யுடன் மோதும் சர்ச்சை நடிகர்.,, இனிமேல் தான் தரமான சம்பவமே இருக்கு!!

இந்தப் படத்திற்கு பாகுபலிக்கு கதை வசனம் எழுதிய விஜயேந்திர பிரசாத் கதை எழுத இருப்பதாகவும், சீதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மீண்டும் இது போன்ற, ஒரு வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்தால் விக்ரமின் புகழ் உலக அளவில் பேசப்படும் என்பதில் ஐயமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here