தனது 61 வது படத்திற்காக மாஸாக தயாராகும் நடிகர் விக்ரம் – இயக்குனர் குறித்த அதிரடி அப்டேட்!!

0

நடிகர் விக்ரமின் 61 வது படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் இயக்க உள்ளதாக வெளியாகிய அப்டேட்டை கேட்ட ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

விக்ரம் 61:

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் விக்ரம்.  இவர் தற்போது தனது மகன் துருவ்வுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைய உள்ளது. இது போக விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை அடுத்து இவர், தனது 61வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது இவர், குதிரைவால், ரைட்டர் போன்ற படங்களை இயக்கி வருகிறார்.  சமீபத்தில் இவர் இயக்கி வரும் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை அடுத்து விக்ரமின் 61 வது படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here