காதல் ஓவியமான “96” ரீ ரிலீஸ்.., சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!!

0

தற்போதைய காலகட்டத்தில் எத்தனையோ காதல் படங்கள் வந்தாலும், எதார்த்த காதல் திரைப்படம் என்றால் அது பிரேம் குமார் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி இந்திய சினிமாவில் மாபெரும் வெற்றியை தொட்ட ‘96’ திரைப்படம் தான். இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, கௌரி மற்றும் ஆதித்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் காட்சிகள் அனைத்தும் நாம் எதார்த்த வாழ்க்கையில் நிகழ்வது போலவே இருந்ததை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இப்படம் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14ம் தேதி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இத்திரைப்படம் வெளியாகி 6 வருடம் கழித்து மறு ஒளிபரப்பு செய்வதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here