இந்த குடும்பம், குட்டி எல்லாம் படத்துல மட்டும் தானா? விஜய்யை ரவுண்டு கட்டி அடித்த பயில்வான் ரங்கநாதன்!!

0
இந்த குடும்பம், குட்டி எல்லாம் படத்துல மட்டும் தானா? விஜய்யை ரவுண்டு கட்டி அடித்த பயில்வான் ரங்கநாதன்!!
இந்த குடும்பம், குட்டி எல்லாம் படத்துல மட்டும் தானா? விஜய்யை ரவுண்டு கட்டி அடித்த பயில்வான் ரங்கநாதன்!!

தளபதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு படத்தின் டிரைலர், நேற்று வெளியாகி இருந்த நிலையில், இது குறித்து முக்கிய கருத்து ஒன்றை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதன்:

விஜய் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி, வெளியாக உள்ளது. படத்தின் டிரைலர், நேற்று வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை தான் நடிக்காத படங்களில் ஒன்று தான் இந்த வாரிசு என, ஆடியோ லான்ச்சில் விஜய் பேசி இருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது படத்தின் டிரைலர் குறித்து, சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, இந்தப் படத்தில் விஜய் குடும்பத்தில் குறை இருக்கலாம் ஆனால் நாம் எல்லாரும் ஒரே குடும்பம் என டயலாக் பேசுகிறார். இப்படி படத்தில் பேசும் விஜய், தன் சொந்த வாழ்க்கையில் ஏன் கூட்டு குடும்பமாக இல்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.

புதிய சாதனை பட்டியலில் இணைந்த கேன் வில்லியம்சன்…, முதல் நியூசிலாந்து வீரரும் இவரே!!

மத்தபடி படத்தில் எல்லாமே நன்றாக இருக்கும் என்பதை ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது என்றும், நடிகர் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் பெரிய அளவில் ரீச் ஆகும் என கருத்து தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here