அந்த ஒரு விஷயத்திற்காக மாணவர்களை வாரிசு படத்திற்கு அழைத்து சென்ற பள்ளி நிர்வாகம்..,

0
அந்த ஒரு விஷயத்திற்காக மாணவர்களை வாரிசு படத்திற்கு அழைத்து சென்ற பள்ளி நிர்வாகம்..,
அந்த ஒரு விஷயத்திற்காக மாணவர்களை வாரிசு படத்திற்கு அழைத்து சென்ற பள்ளி நிர்வாகம்..,

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களில் முதலாவதாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடித்த வாரிசு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குனர் வம்சி படைப்பில் உருவான இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், சாம், யோகிபாபு, பிரபு, சங்கீதா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பாடலாசிரியர் விவேக் வசனம், பாடல் எழுத, அனைத்திற்கும் உயிர் கொடுக்கும் விதமாக இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் தமன். மேலும் முழுக்க முழுக்க கூட்டு குடும்பத்தில் ஏற்படும், நல்ல விஷயங்கள் மற்றும் கெட்ட விஷயங்களை மையப்படுத்தி உருவான இந்த திரைப்படம் உலக அளவில் கிட்டத்தட்ட 300 கோடியை நெருங்கி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுக்காக தான் நான் வாரிசு ஆடியோ லான்ச்சுக்கு போகல.., யோகி பாபு பேட்டி!!

இந்த நிலையில் வாரிசு படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், இந்த திரைப்படம் கூட்டுக்குடும்பத்தில் வாழ்வதால் ஏற்படும் நன்மையையும் , உறவுகளின் மேன்மையையும் அடுத்த இளம் தலைமுறையினருக்கு உணர்த்தும் விதமாக இருந்தது.

அதனால இப்படத்தை பார்ப்பதற்கு ஒரு தனியார் பள்ளி நிர்வாகம் மாணவர்களை அழைத்து சென்றுள்ளது. இப்படி குடும்பங்கள் மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் கொண்டாடும் படமாக வாரிசு விளங்கி வருகிறது. தற்போது விஜய் லோகேஷ் இயக்கி வரும் தளபதி 67 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here