வாரிசு படத்தின் சென்சார் சான்றிதழ் ரிலீஸ்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

0
வாரிசு படத்தின் சென்சார் சான்றிதழ் ரிலீஸ்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!
வாரிசு படத்தின் சென்சார் சான்றிதழ் ரிலீஸ்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் படத்தின் ரன்னிங் டைம் குறித்து முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது. இதனால் இவரின் அடுத்த படத்திற்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தின் அப்டேட்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில் படத்தின் ஆடியோ லான்ச் கோலாகலமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது தளபதி பேசிய குட்டிக்கதை பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் சென்சார் போர்டில் யூ சான்றிதழ் பெற்றுள்ளது.

பாழாய் போன துருவ் விக்ரமின் கெரியர்., பல நாள் பழியை வஞ்சம் வைத்து தீர்த்த அந்த இயக்குனர்!!

மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் என்று படக்குழுவினர்கள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here