என்னது, துள்ளாத மனமும் துள்ளும் படம் வடிவேலுக்காக உருவாக்கப்பட்டதா? அப்புறம் எப்படி விஜய் நடிச்சாரு?

0
என்னது, துள்ளாத மனமும் துள்ளும் படம் வடிவேலுக்காக உருவாக்கப்பட்டதா? அப்புறம் எப்படி விஜய் நடிச்சாரு?
என்னது, துள்ளாத மனமும் துள்ளும் படம் வடிவேலுக்காக உருவாக்கப்பட்டதா? அப்புறம் எப்படி விஜய் நடிச்சாரு?

இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவான துள்ளாத மனமும் துள்ளும், படக்கதை முழுக்க முழுக்க வடிவேலுக்காக உருவாக்கப்பட்டது தான் என்ற ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

வெளியான தகவல்:

இளையதளபதி விஜய் நடிப்பில், சிம்ரன் ஜோடியாக நடித்து, இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகி வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். விஜய் கெரியருக்கு, மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இந்த திரைப்படம் தான். ஆனால் இந்த திரைப்படத்தின் கதை, முழுக்க முழுக்க நடிகர் வடிவேலுக்காக எழுதப்பட்டது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். பிரபல காமெடி நடிகர் சார்லி சாப்ளின் நடித்த City lights என்ற படத்தின் தமிழ் தழுவல்தான் துள்ளாத மனமும் துள்ளும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

முழுக்க முழுக்க இது காமெடி கதை என்பதால், வடிவேலு தான் இதற்கு தகுந்த ஆள் என்று, இயக்குனர் வடிவேலுவிடம் இதைப் பற்றி சொல்லி இருக்கிறார். ஆனால் நடிகர்கள் இந்த கதையில் நடித்தால் நன்றாக இருக்கும், வேறு யாரையாவது பார்த்துவிட்டு, வாருங்கள் யாரும் நடிக்கவில்லை என்றால் நான் நடிக்கிறேன் என்று சொல்லி வடிவேலு இயக்குனரை அனுப்பி வைத்து விட்டாராம்.

வழுவழு கன்னத்தை காட்டி ரசிகர்களை வம்பிழுத்த ரைசா.., மாட்டிகிட்டு திணறும் இளசுகள்!!

பின்பு நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் விஜய் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். அதன் பிறகு அவருக்காக இந்த படத்தில் சில மாற்றங்களை செய்து, இயக்குனர் எழில் துள்ளாத மனமும் துள்ளும் படத்தை விஜய்யை வைத்து உருவாக்கி இருக்கிறார். இப்போது பல ஆண்டுகளுக்கு பின் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here