அட்ரா சக்க.., புதிய சாதனை படைத்த தீ தளபதி பாடல்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

0
அட்ரா சக்க.., புதிய சாதனை படைத்த தீ தளபதி பாடல்.., படக்குழுவினர் அறிவிப்பு!!
அட்ரா சக்க.., புதிய சாதனை படைத்த தீ தளபதி பாடல்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடல் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம்:

கோலிவுட் திரையுலகில் ரஜினிகாந்திற்கு பிறகு ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். பக்க செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் பாணியில் உருவான இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியான வாரிசு திரைப்படம், தற்போது வரை உலக அளவில் 220 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சமீபத்தில் சக்சஸ் பார்ட்டியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாக பரவியது. மேலும் வாரிசு படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடலுக்கு என்றே விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, மற்ற ரசிகர்களுக்கும் அதிகம் பிடித்து போனது.

ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.., முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழுவினர்!!

இப்பாடல் வெளியாகி ஒரு மாதங்கள் கடந்த நிலையில், தற்போது முக்கிய அப்டேட் ஒன்று வெளியானது. அதாவது நடிகர் விஜய் கடந்து வந்த பாதைகளை மையப்படுத்தி உருவான தீ தளபதி பாடல் யூடியூபில் 50M+ பார்வைகளை கடந்துள்ளது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here