இணையதளத்தை புரட்டி போட்ட விஜயின் “தீ” பாடல்.., ஒரே நாளில் இத்தனை யூவர்ஸ் பார்த்துருக்காங்களா!!

0
இணையதளத்தை புரட்டி போட்ட விஜயின்
இணையதளத்தை புரட்டி போட்ட விஜயின் "தீ" பாடல்.., ஒரே நாளில் இத்தனை யூவர்ஸ் பார்த்துருக்காங்களா!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முழு ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்க இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் தளபதி விஜய் பாடிய ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவி பேமஸ் ஆனது. இந்த பாடலுக்கு டப் கொடுக்கும் விதமாக நேற்று மாலை 4 மணிக்கு “தீ” பாடல் வெளியானது. இந்த பாடல் தளபதி விஜய்யை குறித்து எழுதப்பட்ட வரிகள் என்பதால், இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியதாலும் அதிக அளவில் ரீச் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த பாடல் புது சாதனையை படைத்துள்ளது.

திருமணமாகி ஒரு வருடத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை.., வைரலாகும் புகைப்படம்!!

அதாவது இந்த பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 12M பார்வையாளர்களையும், 930K லைக்ஸையும் பெற்றுள்ளது என்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிக்சர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தளபதி 67 படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here