
தென்னிந்திய தமிழ் சினிமாவை கீழே விழாமல் தூக்கி பிடிக்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் நடித்த வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். அதனாலேயே படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தற்போது டோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருவது விஜய் அடுத்த படத்தில் யாரோட கை கோர்க்க போகிறார் என்பதை பற்றி தான்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தளபதி 68 யை கார்த்திக் சுப்புராஜ் எடுக்க இருப்பதாக கூறி வந்த நிலையில், இப்பொழுது வெங்கட் பிரபு தான் இயக்கப் போகிறார் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பாளர் என்றும் தகவல் பரவின. இதனால் ரசிகர்கள் சந்தோஷமடைந்த நிலையில், தற்போது அவர்களின் மகிழ்ச்சியை உடைக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவால் நிகழ்ந்த விபரீதம்., தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவர்!!!
அதாவது நடிகர் விஜய் தளபதி 68 படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் தான் வேண்டும் என்று வெங்கட் பிரபுவுக்கு செக் வைத்துள்ளாராம். வெங்கட் பிரபு இயக்கிய எல்லா திரைப்படங்களிலும் யுவன் தான் மியூசிக் போட்டுள்ளார். அப்படியிருக்க தளபதி 68ல் மட்டும் எப்படி யுவனை விட்டு கொடுப்பார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் வெங்கட் பிரபு யுவன் கூட்டணியை உடைக்க கூடாது என்றும், யுவனுடன் சேர்ந்து விஜய் படம் பண்ண வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.