தெறிக்கவிட்ட தளபதி 67 ப்ரோமோ.., டைட்டில், ரிலீஸ் தேதி என மொத்த  அப்டேட்டையும்  வெளியிட்ட படக்குழு!!

0
தெறிக்கவிட்ட தளபதி 67 ப்ரோமோ.., டைட்டில், ரிலீஸ் தேதி என மொத்த  அப்டேட்டையும்  வெளியிட்ட படக்குழு!!
தெறிக்கவிட்ட தளபதி 67 ப்ரோமோ.., டைட்டில், ரிலீஸ் தேதி என மொத்த  அப்டேட்டையும்  வெளியிட்ட படக்குழு!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தின் டைட்டில் மற்றும் புரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தளபதி 67:

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் இவர் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதனால் இந்த படத்திற்காக ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமே காத்து கொண்டிருக்கிறது. மேலும் தளபதி 67 LCU வாக உருவாவதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் படத்தில் யார் யார் பணியாற்ற போகிறார்கள் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர்.

சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவம்., விம்சர்சையாக கொண்டாடிய மாவீரன் படக்குழுவினர்!!

அதுமட்டுமின்றி படத்தின் பூஜை புகைப்படங்கள், ஷூட்டிங்கிற்கு விமானத்தில் சென்ற வீடியோ என ஒவ்வொன்றாக படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த நிலையில் தளபதி 67 படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் விஜய் பேக்கரி நடத்துபவர் போலவும், வித்தியாசமான தோற்றத்தில் சாக்லேட் கிரீமில் கத்தியை எடுக்கும் காட்சி ரசிகர்கள் மத்தியில் துள்ளல் போட வைத்துள்ளது. மேலும் படத்திற்கு லியோ(LEO) என்று பெயரிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here