தளபதி 67 ல் சியான் விக்ரம் இருக்கிறாரா? .., சின்ன hint கொடுத்த லோகேஷ் கனகராஜ்!!

0
தளபதி 67 ல் சியான் விக்ரம் இருக்கிறாரா? .., சின்ன hint கொடுத்த லோகேஷ் கனகராஜ்!!
தளபதி 67 ல் சியான் விக்ரம் இருக்கிறாரா? .., சின்ன hint கொடுத்த லோகேஷ் கனகராஜ்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படைப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

தளபதி 67:

தற்போது சோசியல் மீடியாவை புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் ஒரு செய்தி என்றால் தளபதி 67 தான். பேஸ்புக், இன்ஸ்டா மற்றும் யூடுப் என எங்கு போனாலும் தளபதி 67 அப்டேட் குறித்து செய்திகள் தான் உலா வருகிறது. ஆமாங்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படைப்பில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் தளபதி 67. இப்படம் லோகேஷ் கனகராஜின் யுனிவர்ஸ் படமாக உருவாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏனென்றால் இந்த படத்தில் விஜய் 40 வயது கேங்ஸ்டராக நடிப்பது மட்டுமின்றி, இந்த படத்தில் கைதி, விக்ரம் திரைப்படம் தளபதி 67 ல் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. மேலும் விஜய்க்கு வில்லனாக 6 பெரிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் மிஷ்கினுடன் விஜய் சண்டை போடும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக இணையத்தில் தகவல் கசிந்தது. இதனை தொடர்ந்து நடிகர் சியான் விக்ரம் தளபதி 67 ல் நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் பரவின.

ரோஜா சீரியல் பிரபலம் திடீர் பதிவு., உங்களுக்கு இவ்ளோ பெரிய குழந்தை இருக்கா? வைரலாகும் கிளிக்ஸ்!!

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் நடிகர் சியான் விக்ரம் குறித்து பேசியுள்ளார். அதாவது சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜிடம் விக்ரம் தளபதி 67 ல் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறதே அது உண்மையா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அப்படி தான் நானும் கேள்வி பட்டேன்.., இன்னும் கொஞ்ச நாள்ல தெரிஞ்சுக்குவீங்க. இப்பவே சொல்லிட்டா சர்ப்ரைஸ் போய்விடும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here