தளபதி 67 இல் ரஷ்மிகாவின் முன்னாள் காதலன் இணைகிறாரா?? லோகேஷ் தரமான சம்பவம் பண்ண போறாரு!

0
தளபதி 67 இல் ரஷ்மிகாவின் முன்னாள் காதலன் இணைகிறாரா?? லோகேஷ் தரமான சம்பவம் பண்ண போறாரு!
தளபதி 67 இல் ரஷ்மிகாவின் முன்னாள் காதலன் இணைகிறாரா?? லோகேஷ் தரமான சம்பவம் பண்ண போறாரு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தளபதி 67:

தமிழ் திரையுலகின் ஐகானிக் ஹீரோவாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் உருவான வாரிசு திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படம் உலக அளவில் 150 கோடிகளை அள்ளி உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் படைப்பில் உருவாக இருக்கும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அண்மையில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு 6 வில்லன்கள் எனவும், விஜய் கேங்ஸ்டராக நடிக்க இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின. வாரிசு திரைப்படம் வெளியான பிறகு தளபதி 67 அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட இருப்பதாக கூறி வந்த நிலையில், தற்போது படத்தை குறித்து முக்கிய தகவல் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது.

இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.., 5வது நாளில் எகிரும் வாரிசு வசூல்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

அதாவது 777 சார்லி ஸ்டார் ரக்ஷித் ஷெட்டி தளபதி 67 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் ராஷ்மிகா மந்தனாவின் முன்னாள் காதலன். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் வரை சென்று சில காரணத்தால் பாதியில் நின்றது. இப்படி எல்லா முன்னணி நடிகர்களை வைத்து தளபதி 67 படத்தில் லோகேஷ் பெருசா ஏதோ சம்பவம் பண்ண போறாரு என்று ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. மேலும் ஜனவரி 22 ஆம் தேதிக்குள் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here