“தளபதி 67” படத்தோட ஷூட்டிங் இங்க தான் நடக்க போகுதா.., விரைவில் படப்பிடிப்பு பூஜை.., படுகுஷியில் ரசிகர்கள்!!

0
"தளபதி 67" படத்தோட ஷூட்டிங் இங்க தான் நடக்க போகுதா.., விரைவில் படப்பிடிப்பு பூஜை.., படுகுஷியில் ரசிகர்கள்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படைப்பில் உருவாகும் தளபதி 67 படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தளபதி 67:

தமிழ் சினிமா துறையில் நுழைந்த குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அண்மையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது. இப்படத்தில் நடிகர் கமல், விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோர் கதாபாத்திரத்தில் மூழ்கி நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படம் 100 நாட்கள் தியேட்டரில் ஓடி கிட்டத்தட்ட 450 கோடிகளை வசூலாக அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை தொடர்ந்து லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்க இருக்கிறார். அதற்கான வேலைகளில் லோகேஷ் படு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது லோகேஷ் இயக்கும் தளபதி 67 படத்தின் பூஜை வருகிற டிசம்பர் 5ம் தேதி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் டிவிக்கு Bye சொல்லிட்டு கிளம்பிய சீரியல் நடிகை.., அடுத்து என்ன செய்ய போறாங்க தெரியுமா??

மேலும் படத்தின் முதல் 15 நாட்களுக்கான ஷூட்டிங் சென்னையில் தான் நடக்க போகிறது என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் மும்பையில் படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தில் ஏற்பட்ட விமர்சனத்தை துடைக்கும் விதமாக தளபதி 67 யை லோகேஷ் எடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here