என்னப்பா நடக்குது.. விஜய் கட்சியில் இருந்து தானாக வெளியேறிய மாவட்டச் செயலாளர்.. முழு விவரம் உள்ளே!!

0

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது AGS தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் (TVK) என்று பெயர் சூட்டியுள்ளார். இதற்கு மக்களிடையே ஆதரவு இருந்தாலும் அதற்கு ஏற்றார்போல் எதிர்ப்பும் இருந்து வருகிறது.


தற்போது விஜய் ஓர் மாவட்ட செயலாளரை நீக்கி விட்டதாக தகவல்கள் உலா வரும் நிலையில் அது தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். அதாவது திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பில்லா ஜெகன், தானாக வெளியேறிவிட்டார் என தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக அவரது சகோதரரான எஸ்.ஜே.சுமன் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here