அடேங்கப்பா.. Stage-ல ஏறி தளபதி விஜய் என்ன இந்த ஆட்டம் ஆடுறாரு – பலரும் பார்த்திராத அறிய வீடியோ!

0

கோலிவுட்டில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். மாண்புமிகு மாணவன் என்ற படத்தில் ஆரம்பித்த இவரின் திரை பயணம் தற்போது வரை வெற்றிகரமாக நீண்டு வருகிறது. நடுவே இவரது கேரியர் சிறிது சறுக்கினாலும் விடா முயற்சியோடு போராடி தன் இடத்தை தக்க வைத்து கொண்டார்.

தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்தபடியாக மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கனவே விஜய் லோகேஷ் கூட்டணி நல்ல வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மீண்டும் இந்த காம்போவை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

படங்களில் சூப்பராக விஜய் நடனம் ஆடினாலும் மேடைகளில் பெரிதாக விஜய் நடனமாடுவதை விரும்பமாட்டார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் உடன் திருமலை படம் வெளியான சமயத்தில் வேற லெவல் மேடை நடனத்தை விஜய் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here